யாழில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்ற நபர் பத்து நாட்களின் பின் பலி!

யாழ்ப்பாணம் – அனலைதீவில் பாம்பு தீண்டியதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் வீடுதிரும்பி பத்து நாட்களின் பின் உயிரிழந்தார்.

அனலைதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 47 வயதுடைய கார்த்திகேசு ரவீந்திரன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 16ஆம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்த போது, இனந்தெரியாதவகை பாம்பு ஒன்று அவரை தீண்டியுள்ளது.

அதற்குச் சிகிச்சை பெற்று மறுநாள் வீடு திரும்பியுள்ளார். பின் கடந்த 26ஆம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டமையால் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருந்தபோதிலும், அவர் சிகிச்சை பலனளிக்காமையால் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் படுகாயம்!

Leave a Reply