எம்மிடம் கூறாமல் மஹிந்த பதவி விலக மாட்டார்! முருத்தெட்டுவே தேரர் தெரிவிப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலக மாட்டார், அவர் ஒரு சிறந்த தலைவர் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச இடை விலகுவது, நாட்டில் தற்போது பேசப்பட்டு வரும் விடயமாக மாறியுள்ளது.

அவர் இடை விலகுவது என்றால் நம்மிடம் கூறுவார். அப்படி ஒரு பொய்யான செய்தியை ஏன் கூறுகின்றனர்.

டொலர் இல்லை என்றால் நாடு வீழ்ச்சி அடையாது. அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்சினை தீர்வுக்கு வரும்.

சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் மட்டுமே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்களை மாற்றினால் குறித்த பிரச்சினை தீர்வுக்கு வரும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜாபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சிறந்த தலைவர்கள், அவர்கள் நாட்டை வலுப்படுத்துவார்கள். 2022ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply