மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைப்பு – ஐந்து பெண்கள் கைது!

கல்கிஸை, இரத்மலானை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது முகாமையாளர் உட்பட ஐந்து பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்கள் 40, 32, 43 மற்றும் 25 வயதுடைய இரத்மலானை, போகஸ்வெவ, பிடபெத்தர மற்றும் பண்டாரவளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை கல்கிஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply