மருதானை கண்ணீர் புகை தாக்குதல்; மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருதானையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று அங்கு சென்றுள்ளதாகவும் முதற்கட்ட அறிக்கை நாளை (6) கிடைத்ததும் விசாரணைகள் தொடரும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பெரும் தொகை செலவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் குழு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply