அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு பொலிசார் விஷேட உத்தரவு!

அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் தலைவி செல்வராணிக்கு திருக்கோயில் பொலிசார் சமன் ஒன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 7ம் திகதி  யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்  சிவில் அமைப்புக்கள் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் மட்டகளப்பினை சென்றடையவுள்ள  நிலையில் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் சிவில் அமைப்புக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து  ஆதரவு பேரணி ஒன்றை மட்டகளப்பு நோக்கிய முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி செல்வராணி திருக்கோயில் பொலிஸ் பிரிவில் போராட்டத்தினை முன்னெடுக்க முடியாது என்ற உத்தரவு அடங்கிய சமன் ஒன்று அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி செல்வராணியிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஜனநாயகரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தினை நசுக்கும் முகமாக பொலிஸ் மற்றும் புலனாய்வு அச்சுறுத்தல்களை ஏற்கனவே செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறனதொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

Leave a Reply