சிற்றுண்டி விலைகளில் மாற்றம்? – வெளியானது அறிவிப்பு

சமையல் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், தமது உற்பத்திகளினது விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் உறுப்பினர்களிடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், லாஃப்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று (5) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.

இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் விலைகள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன.

12.5 கிலோகிராம் எடைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இதன் புதிய விலை 4,743 ரூபாவாகும்.

5 கிலோகிராம் எடைக் கொண்ட சமையல் எரிவாயு விலை 134 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இதன் புதிய விலை 1,904 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் எடைக் கொண்ட சமையல் எரிவாயு விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இதன் புதிய விலை 883 ரூபாவாகும்.

Leave a Reply