'குறுந்தூர்மலை எங்களின் சொத்து' முல்லையில் கவனயீர்ப்பு பேரணி!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் மூன்றாவது நாள் இன்றாகும்.

இந்நிலையில் இன்றுகாலை முல்லைத்தீவிலிருந்து பேரணி ஆரம்பமாகியது.

தற்போது கொக்கிளாய் வீதிவழியாக சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் குறுந்தூர் மலை அடிவார வீதியூடாக ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் தற்போது திருமலையை நோக்கியவாறு சென்று கொண்டிருக்கின்றது.

இதேவேளை குறித்த பேரணியில் “குறுந்தூர் மலை தமிழர்களின் சொத்து” ,  “இராணுவமே வெளியேறு” என்றவாறு கோசங்கள் எழுப்பப்பட்டன.


Leave a Reply