உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 20 ஆயிரம் வேட்பாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 80 ஆயிரம் வேட்பாளர்களுள் 20 ஆயிரம் வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் என்று தெரியவருகின்றது.

அவர்கள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாக இருந்தபோது உள்ளூராட்சி சபைகளுக்குச் சொந்தமான கடைகளை உறவினர்களுக்கு வாடகைக்கு விட்டமை, முறையற்ற விதத்தில் ஒப்பந்தங்களை வழங்கியமை, அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை, தரமற்ற பாதைகளை நிர்மாணித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

தென்னிலங்கை வார இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply