பூப்பறிக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பிலியந்தலை-மிரிஸ்வத்த சந்தி பகுதியில் சொகுசு பேருந்தில் மோதி வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பூப்பறிப்பதற்காக வீட்டிலிருந்த வீதியைக் கடந்துச் சென்று மீண்டும் அதே வீதியைக் கடந்து வீடு திரும்ப முயற்சிக்கும் போது, பிலியந்தலையில் இருந்து கெஸ்பேவ நோக்கி பயணித்த சர்வதேச பாடசாலைக்கு சொந்தமான சொகுசு பேருந்தில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்து சாரதி கவனக்குறைவாகபேருந்தை செலுத்தியதே விபத்துக்கு காரணம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Leave a Reply