ஒமிக்ரான் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!

டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்றுகளை ஒப்பிடும்போது ஒமிக்ரானின் பாதிப்பு தன்மை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஜப்பானைச்சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகள் மீது ஒமிக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அதில் ஒமிக்ரான் தொற்று மூலம் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு, எடை குறைவு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனாவின் பிற உருமாறிய வைரஸ்களுடன் ஒப்பிடுகையில், எலிகளின் நுரையீரலில் இருந்த ஒமிக்ரான் பாதிப்பு பத்தில் ஒரு மடங்கு குறைவாக இருந்தது என ஆய்வில் கூறப்பட்டிருந்தது.

ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மனித திசுக்கள் மீதான ஆய்வறிக்கையும் ஒமிக்ரான் பாதிப்பு குறைவாக இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.

12 நுரையீரல் மாதிரிகளில் மேற்கொண்ட ஆய்வு கொரோனாவின் முந்தைய உருமாற்றங்களைக் காட்டிலும் ஒமிக்ரானின் பரவல் மெதுவாக இருப்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *