இலங்கைத் திரைப்படத்திற்கு சர்வதேச ரீதியில் கிடைத்த கௌரவம்!

கடந்த 3 ஆம் திகதி நெதர்லாந்து போராட்டம் சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கை தமிழ் முழுநீளத் திரைப்படமான ‘மணல்’ விஷேட ஜூரி விருதினை பெற்றுள்ளது.

விசாகேச சந்திரசேகரம் எழுதி, இயக்கி தயாரித்த இத்திரைப்படம் ‘ஒரு முன்னாள் தமிழ் போராளி இராணுவ காவலில் இருந்து வெளியாகி, போரின் போது காணாமல் போன தனது காதலியை தேடும்’ கதையாக இருக்கிறது.

ஏற்கனவே விசாகேச சந்திரசேகரத்தின் ‘Frangipani’ மற்றும் ‘Paangshu’ ஆகிய இவருடைய திரைப்படங்கள் பல உள்நாட்டு சர்வதேச விருதுகளை பெற்றிருந்தது.

இத்திரைப்படம் ‘புரட்சிக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையில் சிக்குண்ட ஒரு இளைஞனைப் பற்றிய எளிய கதை’ என்று விருதினை அளிக்கும் போது நடுவர் குழு குறிப்பிட்டிருந்தது

Leave a Reply