யாழில் மாடு முட்டிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பராமரிக்கப்படும் மாடு ஒன்று முட்டியதில் படுகாயமடைந்திருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாடு முட்டி வயிற்றில் படுகாயமடைந்த நிலையில் ஆலயதில் தொண்டாற்றிவந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply