கோழிப்பண்ணைக்குள் சட்டவிரோத மின்வேலி அமைத்த பெண் உயிரிழப்பு

காலி – பிட்டிகல – தலகஸ்பே பிரதேசத்தில், மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

கிரிதொல – தலக்ஸபே பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மரணமடைந்தார் என பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் கோழி பண்ணையொன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கோழிப்பண்ணைக்குள் வேறு விலங்குகள் வருவதைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மின்சார வேலியில் மோதுண்டே குறித்த பெண் மரணமடைந்தார் என்று, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பிட்டிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply