உயர் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – தேர்தல் தொடர்பில் மைத்திரி கருத்து!

தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், 

தேர்தல் ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பதை என்னால் கூற முடியாது. அது குறித்து தேர்தல் ஆணைக்குழுவும், அரசாங்கமும் தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 09ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன்போதே திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது தெரியவரும். எனத் தெரிவித்துள்ளார்

Leave a Reply