பேரணியை குழப்ப முயற்சி – பேருந்துகளை கற்களால் தாக்கிய இராணுவத்தினர்! நூலிழையில் உயிர் தப்பிய சாரதி

இன்று அதிகாலை 5.40 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை ஏற்றச் செல்லவிருந்த பஸ் வண்டியை 40 ஆம் கட்டையில் உள்ள இராணுவத்தினர் கல்லால் எறிந்து பஸ் கண்ணாடிகளை உடைத்துள்ளனர் என அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி

தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதில் பஸ் சாரதி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

உடைந்த கண்ணாடிகளுடன் பஸ் வண்டி தங்கவேலாயுதம் சென்று கொண்டிருக்கின்றது.

குறித்த கண்ணாடியின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபாய் என்று பஸ் சாரதி கூறிவிட்டு எங்களவு உறவுகளை ஏற்றுவதற்கு அவர் சென்று கொண்டிருக்கின்றார்.

இச் சம்பவத்திற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply