பட்டத் திருவிழாவை ஒத்திவைக்குமாறு சிவாஜி கோரிக்கை!

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, கொரோனா, ஒமிக்ரோன் போன்ற பரவிவரும் தற்கால சூழ்நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா தொடர்பாகக் கேள்வியெழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய சூழ்நிலையில் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா ஏற்பாடுகளை நடத்த வேண்டாம் என்று நான் கூறியுள்ளேன். அதனையும் மீறி நிகழ்வை நடத்த முற்படுவார்களாக இருந்தால் வல்வெட்டித்துறை நகரசபை இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளோம்.

அவர்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதுடன் தேவைப்பட்டால் நீதிமன்றம் மூலமாக இதனைத் தடுக்க முற்படுவோம் – என்றார்.

Leave a Reply