லண்டனில் எரிபொருள் உற்பத்தியில் அசத்தும் யாழ்ப்பாண தம்பதிகள்!

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிகள் எரிபொருள் வர்த்தகத்தில் அதீத வளர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வந்த தம்பதிகளான  சஞ்சீவ்குமார் – ஆரணி பிரித்தானியாவில் பெரும் எரிபொருள் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி, உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிறார்கள்.

1,250 பணியாளர்கள் இவர்களது நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் 11 அலுவலகங்கள் இவர்களுக்கு உண்டு. மசகு எண்ணையைச் சுத்திகரித்து         (Crude oil refinery ) டீசல், பெற்றோல், மண்ணெண்ணை போன்றவற்றை பிரித்தெடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதே இவர்களது பிரதானதொழில்.

பிரித்தானியா முழுவதிலும் இருக்கும் அநேக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஒரு சில பெரும் வர்த்தகர்களிடம் 10 தொடக்கம் 20 வரையான எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உண்டு.

ஆனால் திரு. திருமதி சஞ்சீவ்குமார் தம்பதியினர் ஒரு படி மேலேசென்று, பிரித்தானியாவின் Killingholme எனும் இடத்தில் உள்ள Lindsey Oil Refinery எனும் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தையே வாங்குமளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.

பிரித்தானியாவில் மொத்தமாக ஆறு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. Stanlow, Grangemouth, Humber, Pembroke, Prax Lindsey மற்றும் Fawley ஆகியவையே அவையாகும். இதில் யாழ்ப்பாணத்து தமிழன் சஞ்சீவ்குமாரின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் Prax Lindsey என்பதாகும். 2021 ஆண்டுவரை பிரான்சின் பிரபல எரிபொருள் நிறுவனமாகிய Total இன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தச் சுத்திகரிப்பு நிலையம் இப்போது இவர்களது கையில்  உள்ளதாக கூறப்படுகின்றது.

1999 ஆம் ஆண்டில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை, குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்திய இந்தத் தம்பதியினர், இன்று நாள்தோறும் 113,000 பரல்கள் எரிபொருளை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்கிறார்கள். இவர்களின் Turn over £8.6 billion ஆகும். குறித்த தம்பதிகளுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply