மஹிந்தவின் அரசியல் முகவரே சாணக்கியன் – காட்டமான வியாழேந்திரன்.!

மஹிந்த ராஜபக்சவினாலே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஓர் அரசியல் முகவரே சாணக்கியன் என முற்போக்கு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை மற்றும் முனைக்காட்டில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அத்துடன் கிழக்கு தமிழர்களின் இருப்பை முஸ்லீம் சிங்கள இனவாதிகளிடம் இருத்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றினைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.

தனி தமிழ் கட்சியில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிவுள்ளதாகவும் அவ்வாறு போட்டியிட்டாலே தமிழ் மக்களின் இருப்பினை உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply