பேரெழுச்சியடைந்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மக்கள் எழுச்சிப் பேரணி: பெருகும் ஆதரவு!

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் இறுதி நாள் நிகழ்வுகள் திருகோணமலையில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பில் பேரணிக்கு அமோக ஆதரவு மக்களால் வழங்கப்பட்டு வருகிறது.

வெருகலில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பேரணிக்கு ஆதரவளிக்கும் முகமாக பல்வேறு இடங்களிலும் மக்கள் சிவப்பு மஞ்சள் கொடிகளை பறக்கவிட்டும் வெடிகளை கொழுத்தியும், குளிர்பானங்களை வழங்கியும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை இன்றைய இறுதிநாள் பேரணியில் கட்சி வேறுபாடுகள், மத வேறுபாடுகளுக்கு அப்பால்  பல்வேறு மதத் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் குறித்த பேரணியில் இணைந்து தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

பேரணியில் கட்சி வேறுபாடுகள் மத வேறுபாடுகளுக்கு அப்பால் கிறிஸ்தவ, இந்து மத தலைவர்கள்  மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply