அ , ஆ தெரியாதவர்கள் நாட்டை ஆட்சி செய்தால் இப்படி தான் நடக்கும்! சமீர பெரேரா

அரசு எடுக்கும் முட்டாள் தனமான முடிவுகளால், பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமே , ஐக்கிய பிரஜைகள் முன்னணியின் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு யாரும் ஜனாதிபதியின் சொந்த விடயங்களை பகிரவில்லை.இந்த நிலையில் ஜனாதிபதி பற்றிய விபரங்கள் வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தரத்தை பதிவிட வேண்டிய அவசியம் இல்லை.அவர் செய்வதையே நாம் பதிவிடுகின்றோம்.

24 மணியாலத்தில் உர இறக்குமதி தடை செய்து விவசாயிகளுக்கு இன்னல் ஏற்படுத்திய ஜனாதிபதி இவர்தான்.

இவ்வாறன செயற்பாட்டை சாதாரண மக்கள் செய்யமாட்டார்கள். அங்கு சீனி கொள்ளை.இங்கு சாதாரண மக்களின் வயிற்றில் அடித்தனர்

அரசாங்கத்தில் அ ஆ தெரியாதவர்கள் ஆட்சியை நடத்த முடியாது.

இவர்களின் முடிவுகள் முட்டாள் தனமாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது சாதாரன மக்களே என தெரிவித்துள்ளார்.

Leave a Reply