எண்ணெய்க் குதங்கள் ஒப்பந்தம்: ஜனவரி 18 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைப்பு

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய உடன்படிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அதற்கு முன்னர் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஒப்பந்தம் முன்வைக்கப்படவுள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றன.

Leave a Reply