ஆரம்ப நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் எளிமையான முறையில்: முப்படை மரியாதை மற்றும் அணிவகுப்புகள் நீக்கம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றிருந்தது

ஜனாதிபதி இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற கூட்டதொடரை ஆரம்பித்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துகின்றார்.

ஏற்கனவே ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இன்றைய நிகழ்வை எளிமையாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், முப்படை மரியாதை மற்றும் அணிவகுப்பு என்பன இடம்பெற மாட்டாது எனவும் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply