
இந்தியாவில் 10 வயது சிறுமி ஒருவரை, அவரின் தாய் பணம் திருடியதற்குத் தண்டனையாக மிளகாய்த் தூளை நுகரச்செய்தால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி மகள் அடிக்கடி தன் பெற்றோரிடமிருந்து அவர்களுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்து, அதில் திண்பண்டங்களை வாங்கி வந்துள்ளார்.
பலமுறை அவரின் தாயார் கண்டித்தபோதும் அவர், தொடர்ந்தும் இதனைச் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி தனது மாமாவின் வீட்டில் 70 ரூபாவைத் திருடியதாக, தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கோபம் அடைந்த சிறுமியின் தாய் அவரை தன் வீட்டுக்கு அழைத்துவந்து, தண்டனையாக, சுடுநீரில் மிளகாய்த் தூளைக் கலந்து நுகரச்செய்துள்ளார்.
அத்தோடு, சிறுமியின் வாய் மற்றும் தொடையில் சூடு போட்டுள்ளார். மிளகாய்ப் தூளை நுகர்ந்ததால் இரண்டு நாட்களாக சாப்பிட முடியாத நிலையிலிருந்த சிறுமி ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, சிறுமியின் தாயை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





