பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு!

<!–

பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்பு! – Athavan News

பொரளையிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் இதனை மீட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலினை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply