புத்தூர் சந்தியில் கோர விபத்து – சட்டத்தரணி ரெமிடியாஸ் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சட்டத்தரணியும் மாநகர சபை உறுப்பினருமான மு.றெமீடியஸ் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டிப் பகுதியில் வீதியின் குறுக்கே சென்ற தெரு நாய் ஒன்றுடன் மோதியே விபத்திற்கு உள்ளான சமயம் தலைக் கவசம் கழன்றமையினால் தலையில் பலத்த காயத்திற்கு இலக்காகியுள்ளார்.

இதன்போது வீதியால் பயணித்தவர்கள் பாதை வழியே பயணித்த நோயாளர் காவு வண்டி ஒன்றில் ஏற்றி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி அவசர சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply