இழுத்து மூடப்பட்ட கல்முனை காணி பதிவகம் !

கல்முனை மாவட்ட காணிப் பதிவகத்தில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து எதிர்வரும் ஜனவரி 22 திகதி மறுஅறிவித்தல் மூடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில் இவ்வாறு எட்டு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய பொதுச்சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சுமார் 31 உத்தியோகத்தர்களிடம் இன்று(13) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது எட்டு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா அனர்த்தம் இலங்கையில் பரவல் அடைந்த பிற்பாடு இக்காணி பதிவகத்தில் 3 ஆவது தடவையாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *