மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்! பின்னர் நடந்த விபரீதம்

ஆராய்ச்சிக்கட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் இருவரை வெட்டி காயப்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நபரின் மனைவி மற்றும் அவரது காதலன் என கூறப்படும் நபர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்..

இந்தச் சம்பவத்தில் ஆராச்சிக்கட்டுவ வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது நண்பருடன் மனைவிக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply