யாழில் டாக்டர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்ததின நிகழ்வு

வட்டுக்கோட்டை – அராலியில் டாக்டர் எம்.ஜி.ஆரின் பிறந்ததின நிகழ்வு இன்று (17) வெகு சிறப்பாக நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் குமுக்கன் குளத்தடி மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கலந்து சிறப்பித்தார்.

எம்.ஜி.ஆரின் 30 அடி உயரமான படத்திற்கு மாலை அணிவித்து இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

Leave a Reply