மற்றுமொரு கஞ்சா தோட்டம் அதிரடிப்படையினரால் முற்றுகை

பொகுனுதென்ன பகுதியில் சட்டவிரோதமாக பயிரடப்பட்ட கஞ்சா தோட்டத்தினை, வல்துறை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது, மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை உடவளவ காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 70 பேர்ச் கஞ்சா தோட்டத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பயிரடப்பட்ட 258.714 கிலோ கிராம் கஞ்சா இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஹம்பேகமுவ, பலாங்கொட மற்றும் தனமல்வில பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் ஹம்பகமுவ காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களை இன்றைய தினம் வெல்லவாய நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

தயவு செய்து சபையில் கெட்ட வார்தைகள் பேச வேண்டாம்! சபாநாயகர் கோரிக்கை

Leave a Reply