பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை! – ஆசிரியர் சங்கம் தகவல் SamugamMedia

பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,  கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட சுமார் 8,000 பேர் வெளியேறியுள்ளனர்.

எனினும், அவர்களை முறையாக பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான உரிய திட்டம் கல்வி அமைச்சிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply