போதையில் வீட்டுக்கு சென்ற சிறுவன்; தாய் கண்டித்ததால் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! – யாழில் துயரம்SamugamMedia

போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய்  கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த சிறுவன் உயிரை மாய்த்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்  ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார்.

அதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில்  சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

திங்கட்கிழமை (13) காலை அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதன மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்

Leave a Reply