வவுனியாவில், குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில் அனுமதி! SamugamMedia

வவுனியா, கோவில்குளம் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (21) பிற்பகல்  காற்றில் கலைந்த குளவி வீதியால் சென்றவர்கள் மீது கொட்டியதால் பாடசாலை சென்ற மாணவர் ஒருவர் உட்பட ஐவர் வவுனியா பொது வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிவிக்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையின் பின்னர் மாலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

அவ்வீதியால் சென்ற நான்கு பேர் உட்பட பாடசாலைவிட்டு வீடு சென்ற மாணவனுமே இக் குளவிக்  கொட்டிற்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply