யாழ். பல்கலை முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரனிற்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தி இறுதிக் கௌரவம் SamugamMedia

அமரத்துவமடைந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றது.

அந்த வகையில் இன்று யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதன்போது அவருடைய நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றன 

குறித்த அஞ்சலி நிகழ்வில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் , அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள். 

மேலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளால் சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.

Leave a Reply