சேருவில பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் யானை மீட்பு!SamugamMedia

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டு யானை ஒன்று துப்பாக்கி சூட்டு காயத்துடன்  மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் இன்று(24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டு யானை இனந்தெரியாதோரால் கட்டுத்துவக்கினால் சுடப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த யானை கவன்திஸ்புர கிராம சேவகர் பிரிவில் உள்ள வயற்காணி ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு தற்போது வருகைதந்த வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் அதனை பார்வையிட்டு அதற்குரிய சிகிச்சையை முன்னெடுத்து வருகின்றார்கள்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply