நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம்

களை நெல் எனப்படும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்காலத்தில் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நெற் செய்கையானது 71 ஆயிரத்து 24 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தின் முரசுமோட்டை, உருத்திரபுரம், கணேசபுரம், பூநகரி போன்ற பகுதிகளில் அதிகளவில் களையின் தாக்கம் பரவி வருகின்றது.

வயலில் நீர் உள்ள போதும், விதைப்பதற்கு முன்பு விதைகளை சுத்திகரித்து, நீர்ப்பாசன வாய்க்கால்களை சுத்தம் செய்து நெல்லை விதைப்பதன் மூலம் குறித்த களையினை ஆரம்பத்திலே விவசாயிகள் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

எதிர்வரும் காலங்களில் களைநாசினி பயன்பாடு இல்லாது போனால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே விவசாயிகள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொன்னையா அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply