விலை அதிகரிப்பின் எதிரொலி: அரை இறாத்தல் பாணும், பருப்புக் கறியும் 150 ரூபா

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கான முடிவு நியாயமானது.

பாண் மற்றும் பிற பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி உரிமையாளர்களின் முடிவு அரசாங்கத்தையோ அல்லது பொதுமக்களையோ சிரமப்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.

பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும் பண்டங்களின் விலை உயர்வு காரணமாக தொழில் சிக்கலில் இருக்கிறது.

எனவே இந்த நடவடிக்கை நியாயமானது.

அத்தியாவசியத் தேவைகளுக்காக சிறிய அளவிலான கடைகள் மாத்திரமே திறக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கடைகளில் விற்கப்படும் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக் கறியின் விலையானது 150 ரூபாவாகவும் பிளேன் ரீ ஒன்றின் விலையானது 25 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன என்றார்.

Leave a Reply