காணாமல் போனவர்களின் உறவுகளுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு

வவுனியாவில் கடந்த 1645வது நாளாக தொடர்ந்து போராட்டத்தினை முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு “உறவுக்கு கைகொடுப்போம்” சுவிஸ் கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கப்பட்டது.

இதன்போது 25காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு சங்கத்தின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் ஊடாக குறித்த உலருணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.

‘உறவுக்கு கைகொடுப்போம்’ சுவிஸ் கிளையினருக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் நன்றிகளை தெரிவித்தனர்.

Leave a Reply