முகக்கவசங்களை வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை

கொரோனா தொற்று காரணமாக அணியப்படுகின்ற முகக்கவசங்கள் வீதிகளில் மட்டுமின்றி, குளம், கடல்,காடு என பல்வேறு இடங்களிலும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் வீசி எறியப்படுகின்றது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தலால் அணியப்படும் முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முறையற்ற விதத்தில் சுற்றுச்சூழலில் முகக்கவசங்கள் வீசப்படுவதனை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply