முன்னாள் ஜனாதிபதி மூளையில்லாதவர்: ரணில் நரி : சாணக்கியன் எம்.பி! SamugamMedia

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மூளையில்லாதவர் தற்போதைய ஜனாதிபதி நரி போன்றவர்.கோட்டாவை போன்று ரணிலை இலகுவில் விரட்டியடிக்க முடியாது.இதற்காக பலமான போராட்டங்கள் செய்யப்பட வேண்டுமென பா.உ இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

திருகோணமலை ,மூதூர் – கட்டைறிச்சான் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

முன்னால் ஜனாதியை பதவியிலிருந்து நீக்குவதற்காக தென்பகுதியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நாமும் களத்தில் நின்றோம்.எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க ஒரு நரி போன்றவர்.எப்படியாவது தந்திரபாயங்களை மேற்கொண்டு  தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார்.தென்பகுதி போன்று வடகிழக்கு மக்களும் தேர்தலை நடாத்துமாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும்.

மொட்டு கட்சியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடவில்லையென பசில் ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்தார்.ஆனால் அவர்கள் பல்வேறு சுயட்சைக் குழுக்களை இறக்கியுள்ளார்.தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக மறைமுக சதி இடம்பெறுகின்றது.அதற்காக வியாழேந்திரன், பிள்ளையான் போன்றோரின் கட்சிகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோருக்கு திருகோணமலையில் இடம் கிடைத்தால் திருமலையிலுள்ள மண் உள்ளிட்ட ஏனை வளங்களை விற்றுவிடுவார்கள்.ஆதலால் அவர்களுக்கு திருமலை மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம்.நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் என்று எமக்கு நன்றாகவே தெரியும்.

எத்தனை கட்சிகள் வந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்க நினைத்தாலும் தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்தினையே ஆதரிப்பார்கள் என்று எமக்கு தெரியும்.தமிழ் மக்களுக்காக எமது பயணம் தொடருமெனவும் தெரிவித்தார். 

Leave a Reply