கோட்டாவின் ஆலோசகர்கள் வழங்கிய தவறான தீர்மானமே – இன்றைய அராஜக நிலைக்கு காரணம் – ருவான் விஜயவர்தன!

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியல்ல என்பதை அனைவருக்கும் வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான முடிவுகளினால் நாடு அராஜகமாக மாறியதாகவும் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் படை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த மாதம் சர்வதேச நிதியத்திடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் 

அதன் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் ருவான் விஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply