மன்னாரில் 2022 ஆண்டுக்கான கால போக நெல் அறுவடை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடைகள் தற்போது ஆரம்பித்துள்ளது

நாட்டில் இரசாயன உரம் தடை செய்யப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையின் அறுவடை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

குறிப்பாக 30-40 மூடை நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களில் 15-20 மூட்டைகளே கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்

அதே நேரம் களை நாசினிகள் தடை செய்யப்பட்ட நிலையில் நெற்செய்கையில் பெறும் பகுதியில் புற்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுவதும் அவதானிக்க கூடியதாக உள்ளது

மேலும் தனியார் நெற்செய்கை கொள்வனவிற்கு இதுவரை நிர்ணய விலை நிர்ணயிக்கப்படாமையினால் நாளுக்கு நாள் நெல்லின் விலை குறைவடைவதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

Leave a Reply