வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் திடீரென உயிரிழப்பு ! SamugamMedia

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (5) மரணமடைந்தார்.

குறித்த நபர் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு இன்று திடீர் சுகவீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.   

  

சம்பவத்தில் கருணாரத்தின பண்டார என்ற 56 வயதான நபரே மரணமடைந்தார்.

Leave a Reply