அனுமதி வழங்கல் முறை மூலம் தொழில் செய்கின்ற வாய்ப்பை இல்லாதொழிக்க வேண்டும் – செல்வம் எம்.பி. வேண்டுகோள் !

அனுமதி வழங்கல் முறை மூலம் தொழில் செய்கின்ற  வாய்ப்பை இல்லாதொழிக்க வேண்டும்  என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று  சமூகம்  ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் , 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியானது தொடர்ந்து கொண்டிருக்கையில் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளி்ல் ஈடுபடுவதற்கு அனுமதித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் பொருளாதார மீட்சிக்குப் பயன்படுத்தலாம் என வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்தை நாம் கண்டிக்கின்றோம்.

எமது மீனவர்கள் மிகவும் பிரச்சினையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவை நாங்கள் மதிக்கின்றோம். இந்தியாவிடமிருந்து அரசியல் தீர்வு கிடைப்பதற்கான நிலைமை ஒருபக்கமிருந்தாலும்,  எமது மீனவர்கள் பட்டினி நிலைக்குச் சென்று அரசின் பொருளாதாரத்தை மீ்ட்பதற்கான அனுமதியைக் கொடுக்க முடியாது 

ஆகவே இந்த அனுமதி வழங்கல் முறை மூலம் தொழில் செய்கின்ற  வாய்ப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பது இந்தக் கூட்டத்தின் தீர்மானமாக இருக்கின்றது. 

தொப்புள் கொடி உறவு என்றாலும் அண்ணன் தம்பி என்றாலும் வாயும் வயிறும்  வேறு என்பது போல் எமது மீனவர்களின் வரப்பிரசாதங்களையும் வருமானங்களையும் தடை செய்யும் முறைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

ஆகவே இலங்கை அரசாங்கம் இததை மீள்பரிசீலனை செய்யப்படாத தருணத்தில் எமது மீனவர்கள் பாரிய போராட்டங்களை நடாத்துவதைத் தவிர வேறு வழியில்லை. என்றார்

Leave a Reply