அச்சுவேலியில் 30 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது SamugamMedia

 

நேற்றிரவு, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்சுவேலி, வாதரவத்தை – பெரிய பொக்கணை பகுதியில் வைத்து 30 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது வயதுடையவர் ஆவார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் தனது வீட்டிற்கு அருகே உள்ள காணி ஒன்றில், கசிப்பினை போத்தல்களில் அடைக்கும்போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சான்றுப் பொருட்களுடன் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்ட அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply