திருகோணமலை போக்குவரத்து சபையின் உழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலையின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை சாலையின் முகாமையாளரை இடமாற்றக்கோரியே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

30 பேருந்துகளுக்கு மேல் சேவையிலிருந்த குறித்த சாலையில் தற்போது 18 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக முகாமையாளரை மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தி குறித்த சாலையின் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முகாமையாளரது பொறுப்பின்மையின் காரணமாக குறித்த சாலைக்கு கிடைக்கப்பெற வேண்டிய பல சலுகைகள் துரதிஷ்டவசமாக கிடைக்கப்பெறவில்லை என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக திருகோணமலை சாலைக்கு உரித்தான  பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு அதனைத்தவிந்த அனைத்து பேருந்து சேவைகளும் வழமை போல இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply