போலியான தகவல்கள்! பொது மக்களுக்கு அரசு விடுத்துள்ள எச்சரிக்கை SamugamMedia

சமுர்தி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை நூற்றுக்கு 75 வீதம் குறைப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி ஏ பி பஸ்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

சமூக நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்து அரசாங்கம் கொடுப்பனவினை குறைப்பதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

அத்தோடு நலன்புரி உதவிகளை பெறுவதற்காக போலியான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. நலன்புரி கொடுப்பனவுகளை கோரி 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த விண்ணப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்வதாக ராஜாங்க அமைச்சர் கூறினார்.

நலன்புரி கொடுப்பனவை விரைவில் மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். விண்ணப்பதாரிகளால் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு அதிகாரிகள் வீடுகளுக்கு வருகை தரவுள்ளவுள்ளனர்.

அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ராஜாங்க அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply