சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை! SamugamMedia

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தை பொருட்படுத்தாமல் பலர் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சிப்பது குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேநேரம் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக தொடர்ந்தும் இணைந்து செயற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்கள் அங்கு செல்வதற்கு பூஜ்ஜிய வாய்ப்பு கூட இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply