வடமாகாணத்தில் உள்ள அனைவரும் சுயதொழில் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம்- பிகிராடோ! SamugamMedia

தென்னிலங்கையை பார்த்தால் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன.கம்பெனிகள் உள்ளன.ஆனால் எமது பகுதிகளில் இல்லை எனவே விரும்பியோ விரும்பாமலோ மன்னார் மாவட்டமாக இருந்தாலும் சரி வடமாகாணத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி சுயதொழில் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமும்,மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் சார்ந்த உற்பத்தி சார் பயிற்சி நெறி இன்றைய தினம்(14) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 45 நபர்களுக்கு உற்பத்தி சார் பயிற்சி யை வழங்கி வருகின்றோம்.பயிற்சியை பெற்றுக்கொள்ளுகின்றவர்கள் பயிற்சி விப்பாளர்களாகவும் வர வேண்டும்.

இவ்வாறான ஒரு எதிர் பார்ப்புடன் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் வட மாகாணத்தில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் கடமையாற்றி வருகிறோம்.

அதிலும் சிறப்பாக தொழில் முயற்சியாளர்களை , அவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதன் ஒரு பகுதியாக சுயசார்பு உற்பத்தி குறிப்பாக எங்களுக்கு தேவையான உற்பத்திகளை எங்களின் வளங்கள் ஊடாக உற்பத்தியை மேற்கொண்டு,அதில் வரும் பயனை எங்களோடு,எமது சூழலுக்கு அதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒரு சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் செயற்பாடே தற்சார்பு பொருளாதாரமாக உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியில் உள்ளது.நிதி இல்லை.வருமானங்கள் அனைத்தும் முடங்கி போயுள்ளது.

மன்னார் மாவட்டத்தில்  மீன்பிடி விவசாயத்தை தவிர உற்பத்தி மையங்கள் இல்லை.தென்னிலங்கையை பார்த்தால் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன.

கம்பெனிகள் உள்ளன.அங்கே சென்று வேலை செய்ய முடியும்.ஆனால் எங்களுக்கு மாற்று வழி இல்லை.

எனவே விரும்பியோ விரும்பாமலோ மன்னார் மாவட்டமாக இருந்தாலும் சரி வடமாகாணத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் சரி சுயதொழில் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருக்கிறோம்.

அதன் ஓர் அங்கமே குறித்த சுயதொழில் பயிற்சி.எனவே உங்களின் சுய தொழில் உற்பத்திகள் உங்கள் கிராமங்கள் ஊடாக விநியோகிக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a Reply