மேலும் குறைக்கப்படும் முச்சக்கரவண்டி கட்டணங்கள்! வெளியான அறிவிப்பு SamugamMedia

நாடாளாவிய ரீதியில் முச்சக்கரவண்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

எனினும் வவுனியாவில் பல முச்சக்கரவண்டி தரிப்படங்களில் பல்வேறுபட்ட நிலையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றதாக பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். 

இது குறித்து வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத் தலைவர் இ.ரவீந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது. 

முச்சக்கரவண்டி சேவைக் கட்டணங்கள் குறைப்பது தொடர்பில் அனைத்து சாரதிகளுடனும் கலந்துரையாடுவதற்கான கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து அது குறித்து மிக விரைவில் கலந்துரையாடி அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *