சகலவிதமான நிவாரணங்களும் வழங்கப்படும்! – இலங்கையர்களுக்கு பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு சகலவிதமான நிவாரணங்களையும் வழங்குவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளும் அதற்கான வழியை சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தற்போது ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கதவு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமன்றி முழு நாட்டிற்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply